ரெண்டு காலும் இல்லை, என்னால் எதுவும் செய்யவும் முடியாது. என்னை எப்படி மாற்றுத்திறனாளினு சொல்றே?’ என்று, நண்பன் ஒருவன் போகிறபோக்கில் கேட்ட கேள்விதான் இந்த ஆட்டோ உருவாகக் காரணம்!'' என்கிறார் கமலக்கண்ணன். ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக ஆட்டோ மொபைல் துறை உதவிப் பேராசிரியராக இருக்கிறார். தன்னுடைய மாணவர்கள் உதவியுடன் இவர் வடிவமைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆட்டோ, தனித்துவம் வாய்ந்தது.
'என்னுடைய துறைத் தலைவர் சுப்ரமணியனின் யோசனையும் கல்லூரிநிர்வா கத்தின் ஒத்துழைப்புமே இதற்குக் காரணம். ஆட்டோவில் டிரைவர் இருக்கையை முழுவதுமாக மாற்றி அமைத்து உள்ளோம். டிரைவர் இருக்கைக்குப் பதிலாக, சிறிய சக்கர நாற்காலி ஒன்றைப் பொருத்தினோம். 'ஜாய் ஸ்டிக்’ மூலம் அந்தச் சக்கர நாற்காலியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். இதேபோல் ஆட்டோவுக்குள் சக்கர நாற்காலியை ஏற்றுவதற்கு வசதியாக, லிஃப்ட்டையும் பொருத்தினோம். இது, பி.எம்.டி.சி. எனும் மின்சார மோட்டார் மூலம் இயங்குகிறது. அதிகபட்சமாக 400 கிலோ வரை தாங்குதிறன் கொண்ட இந்த லிஃப்ட்டின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால், 40 முறை ஏறி இறங்கலாம். வழக்கமான ஆட்டோக்களில் ஆக்சிலரேட் டர் மற்றும் கிளட்ச்சை கைகளாலும் பிரேக்கைக் கால்களாலும் இயக்க வேண்டி இருக்கும். ஆனால், நாங்கள் வடிவமைத்த ஆட்டோவில் அனைத்தையுமே கைகளால் இயக்கும் வகையில் மாற்றினோம்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல் உள்ளது. அதனால் பெரும்பாலும் அவர்கள் லைசென்ஸ் இல்லாமலேயே வண்டி ஓட்டுகின்றனர். அவர்களுடைய கவனத்துக்காக இந்தத் தகவலைச் சொல்கிறேன், கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க பரிந்துரை சான்றிதழ் வழங்கப்படுகிறது'' என்பவர் தொடர்ந்து, ''இந்த ஆட்டோ வின் வடிவமைப்பு பார்க்க எளிதாகத் தெரிந்தாலும் இதை வடிவமைக்க ஒரு வருஷம் பிடித்தது. ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அனைத்து இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கூட்டமைப்பு, இந்த ஆட்டோவைத் தயாரிக்க 6 லட்சம் தந்து ஊக்கம்அளித்தது.
எங்கள் கல்லூரி அமைந்து உள்ள கேளம்பாக்கத்தில் இருந்து போரூர் வரை நெரிசல் மிகுந்த சாலையில் மாற்றுத்திறனாளி ஒருவரைவைத்து 'சோதனை ஓட்டம்’ செய்தோம். அவர் 'ஆட்டோ வில் ஏறி இறங்குற இடம் மட்டும் குறுகலா இருக்கு. மற்றபடி சூப்பரா இருக் குங்க!’ என்றார். அவர் சொன்னது சரிதான். டீச லில் இயங்கும் ஆட்டோ வில் டிரைவர் ஏறி, இறங்கறதுக்கு 24 இஞ்ச் இடைவெளி உள்ளது.
பெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டரால் இயங்கும் ஆட்டோக்களில் வெறும் 18 இஞ்ச் இடைவெளி மட்டுமே உள்ளது. ஆனால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் டீசல் ஆட்டோக்களை இயக்க அனுமதி கிடையாது என்பதால், நாங்கள் பெட்ரோல் ஆட்டோவைத் தேர்வுசெய்தோம். அரசின் இந்த முடிவை மாற்றுத்திறனா ளிகள் பயன்படுத்தும் ஆட்டோக்களுக்கு மட்டும் தளர்த்தி, டீசல் ஆட்டோக்களை இயக்க அனுமதித்தால் அவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்'' என்கிறார் கமலக்கண்ணன்!
MY BEST WISHES FOR HINDUSTAN UNIVERSITY AND Sir KAMALAKANNAN keep it up sir by S.MOHAMMED MUSTAFA,
Comments
Post a Comment