Skip to main content

Posts

Showing posts from September, 2012

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்?.

இஸ்லாமும் அறிவியலும் பகுதி-28 இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்?. என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம். பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்: பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் – 02 வசனம் 173) மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் 05 - 03 வதுவசனத்திலும் அத்தியாயம் 06 – 145வது வசனத்திலும் – அத்தியாயம் 16 – 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் – இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன. பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது. கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்க