( CALCULATER ):கால்குலேட்டர்களை கணக்குப்போடுவதற்கு மட்டும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்த நாடுகளில் பல்வேறு பயன்பாட்டுக்கும் கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். சமையலில் எந்தப் பொருளை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை அளந்து பார்க்க கிச்சன் கால்குலேட்டரை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் தனது உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு சாக்லெட் சாப்பிடலாம் என்று பார்க்க சாக்லேட் கால்குலேட்டர் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கார்பன் மிகுந்திருக்கிறதா? என்பதை கவனிக்க கார்பன் கால்குலேட்டர் இருக்கிறது. மருந்து சாப்பிடும் நோயாளிகளுக்கு சரியான அளவில் மருந்து சாப்பிட உதவும் `ஆர்கிமெடிஸ்` கால்குலேட்டர்கள் இருக்கின்றன. ( CREDIT CARD) :கிரெடிட் கார்டை விட வேகமாகவும், பாதுகாப்பாகவும் பண பரிமாற்றம் செய்ய டிஜிட்டல் வாலட் உதவுகிறது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரெடரிக் பாம்பிளாட், `வாலட்` கருவியை வடிவமைத்தார். இது கடிகார வடிவிலான சிப். இதை கணினியுடன் இணைத்து யாருக்கு பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற விவரத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட ...